Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 01, 2018

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கயிறு இறுகி பலி !!!

Currently online
13 வயது சிறுவன் கயிறு இறுகி பலியான சம்பவம் ஒன்று கிளிநொச்சி முழங்காவில் அன்புபுரம் பிரதேசத்தில்  இடம்பெற்றுள்ளது.

தாயார் மற்றும் சகோதரிகள் அயலவர்களின் உதவியுடன் சிறுவனை மீட்டு முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் பாடசாலை முடித்து வீடு திரும்பி இரு தங்கைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கையில் சம்பவம் இடம்பெற்றதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

மூன்று பெண் சகோதரிகளுக்கு மூத்த பிள்ளையான இச் சிறுவன் வழமையாக விளையாடுவதாகவும், அவ்வாறே இன்றும் விளையாடிக்கொண்டிருக்கையில் அங்குள்ள கொய்யா மரம் ஒன்றில் விளையாட்டுக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் இறுகி சிறுவன் உயிரிழந்துள்ளார் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும்  சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை முழங்காவில் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.