Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, August 04, 2018

மழைத் துளியே விலகிவிடு என்னவனே எனக்குள் கலந்துவிடு...! தூது போ தென்றலே!!!

Currently online
விழியோரம் கதை பேசி
__மொழி வீரம் தனை வீசி
வலியில்லா வழியாகி
__ஒளிமகன் போலாகி
ஒலித்திட நீ வாறாயோ ?

இமை மூடா சிறகாகி
__நமையாளும் உறவாகி
கலை பாடும் அழகாகி
__கணை தீண்டி எனை
களவாடப் போறாயோ ?

கல் மீது உளியாகி
__சிலையோடு உயிராகி
விலையில்லாப் பொருளாகி
__முளைத்திடும் விதையாக
முத்தமதைத் தாறாயோ ?

சிந்தையதை சீராக்கி
__நிந்தையதை சிதறாக்கி
விந்தையிலே மலராகி
__சுடும் கந்தகத்தில் கருவாகி
எனை எரித்திட வருவாயோ ?

நெஞ்சினிலே நீயாகி
__பஞ்சினிலே படராகி
மா பிஞ்சினிலே தேனாகி
__சிறு வண்டதுவாய்
கடத்திவிட துணிவாயோ ?

செல்ல மொழி நீயாக
__சின்னக் குயில் நானாக
வண்ண மயில் நடையாக
__தினம் எண்ணமதில் நினைவாக
நிரந்தரமாய் இருப்பாயோ ?

தேகமது நனைகிறதே
__தென்றலே தூது போ
வானமது பொழிகிறது
__மழைத் துளியே விலகிவிடு
என்னவனே எனக்குள் கலந்துவிடு...!!


          நன்றி
கவிப்பிரியை சுஜனி

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.