Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 31, 2018

யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி!

Currently online
யாழில் முச்சக்கர வண்டி ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முற்பகல் 9.45 மணியளவில் யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு முன்பாக நிறுத்திவைத்துவிட்டு பாடசாலைக்குள் சென்றுள்ளார். 

அவர் நிறுத்திவைத்து சுமார் 20 நிமிடங்களில் முச்சக்கர வண்டியில் தீ பரவி எரிந்ததாக சாரதி தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டியில் தீ பற்றி எரிவதை அவதானித்த சாரதி, நீர் ஊற்றி அணைக்க முயன்ற போது முச்சக்கர வண்டியின் முழுப் பகுதியிலும் தீ பரவி முற்றிலும் சேதமடைந்தாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த வாகனம் தீப் பிடித்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. எனினும்  இயந்திரப் பகுதியில் பெற்றோல் கசிவு ஏற்பட்டு தீப் பிடித்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.