Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 29, 2018

இப்படியும் ஒரு மருமகளா? மாமியார் இறந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் மருமகள் மரணம்!

Currently online
புத்தூர் பாரதிநகரை சேர்ந்தவர் ஜெயமேரி. வயது 90. இவரது கணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். ஆல்பர்ட், ஜேம்ஸ் என்ற 2 மகன்கள் மட்டும் உள்ளனர். இரண்டு மகன்களுக்கு நல்ல பொறுப்பான பணி. ஆல்பர்ட் காதிகிராப்ட் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஜேம்ஸ் சி.இ. பள்ளி ஒன்றின் தாளாளராக உள்ளார். ஆல்பர்ட்டின் மனைவி பெயர் சுசிலா. இவருக்கு வயது 60. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

இந்தநிலையில் ஜெயமேரிக்கு அதிகமாக வயசாகிவிட்டதால், உடம்பு ரொம்பவே மோசமடைந்தது. அதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் சிகிச்சை கொடுத்தும், உடல்நலம் ஒத்துழைக்கவில்லை. அதனால், அவர் உயிரிழந்துவிட்டார். எனவே அவரது உடல் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு, இந்த தகவல் சொந்தக்காரர்கள் அனைவருக்கும் சொல்லப்பட்டது.

தகவல் அறிந்து பதறியடித்து கொண்டு ஓடிவந்தார் வீட்டு மருமகள் சுசிலா. மாமியாரின் உடலை கண்டு கதறி புரண்டு அழுவார் என்று பார்த்தால், அழவே இல்லை. கண்களில் நீர் மட்டும் கன்னங்களில் வழிய வழிய, மாமியாரின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்து நின்று கொண்டே இருந்தார். அங்கு இருந்தோர் எல்லோரும் சுசிலாவையே மிரண்டு பார்த்தனர். சிறிது நேரம் உறைந்து நின்ற சுசிலா அப்படியே மயங்கி சரிந்து விழுந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் சுசிலாவை தூக்கி காரில் போட்டுக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனாலும் பலனில்லை. ஏற்கனவே சுசிலா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். மாமியாரை உடலை கண்டு விறைத்து, உறைந்து நின்றாரே, அப்போதே சுசிலாவின் உயிரும் பிரிந்து விட்டது.

ஒரே வீட்டில் அடுத்தடுத்து இரண்டு எதிர்பாராத மரணங்கள்.. அந்த சுற்று வட்டார பகுதி மக்களால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை. மாமியார் உடல் வைக்கப்பட்டிருந்த அதே சி.இ. பள்ளியில் மருமகளின் உடலும் வைக்கப்பட்டிருந்ததை கண்டு மனம் வெடித்து மக்கள் கதறி அழுதனர். மாமியார் மருமகள் என்றாலே எலியும் பூனையும் என்பதை சுக்குநூறாக உடைத்தெறிந்து சென்றுவிட்டார்கள் இவர்கள் இருவரும்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.