Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, August 11, 2018

தெய்வ மகள்..!!!!!

Currently online
தென்னை மரச் சோலையிலே 
தென்றலாகி நின்றவளே
தேர் போகும் தெருவெங்கும் - வலம்வரும்
தெய்வமகள் நீதானே

தேகமெல்லாம் மெய் சிலிர்க்க 
தேவதையே வந்து முன் நிற்க
தேடியோடித் திரிந்து பார்த்து
தேவையுணர்ந்து வேண்டி நின்றேன்

பெண்ணே என்னைப் பார்
பெரிதாய் ஒன்றும் சொல்லேன் - உன்
பெயரைச் சுருக்கி மனசிலமர்த்தி
பெருமாள் வந்து உதவ வேண்டி

கண்ணை இறுக மூடி
கற்பனைக் கவிதை வடித்து
உன்னை அருகே அழைத்து
விண்ணைத்தாண்டி சென்று

உள்ளம் முழுதும் நீயே
உயிரில் கலந்த கவியே
எண்ணமெல்லாம் உன்னிடத்தே
எப்படியோ சொல்லிமுடித்து

தெள்ளத்தெளிவுடன் நானிருக்க
தேம்பித்தேம்பி நீ அழ
என்னவென்று அறிந்திடவே
என்னுள்ளம் உன்னைத்தாங்க...

கள்ளமின்றி நீ கூற வரும் 
காதல் மொழியைக்கேட்பதற்கு - என்
செவிகளிரண்டும் குவிந்து வர - அவளோ
செய்கை மூலம் புரிய வைக்க
என்னென்னோ முயற்சி செய்தாள்

கண்ணும் கையும் அசைவிலங்கே
காதல் சொல்ல துடிதுடித்தாள்
பிறப்பு முதலாக இழந்த பேச்சு
பின்னர் எப்படி - எனக்கு எடுத்துரைப்பாள்..!

உங்களுக்குள் எழும் கேள்விகளுக்கெல்லாம்
எனக்கு மட்டுமே பதிலளித்தாள்
அழகும் அறிவும் அப்படியே இருப்பதில்லை
குறையும் நலனும் கூடுதலாய் தெரியாதிருக்க..!

         நன்றி 
வன்னியூர் சுகிர்
     கிளிநொச்சி
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.