Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 31, 2018

பெண்மையை போற்றிடுவீர்..!

Currently online
ஒவ்வொரு பெண்ணிற்கும் 
ஒவ்வொரு ஆண்மகன் 
துணையன்று ...
தந்தையாய் தமையனாய் 
தம்பியாய் தனிமையிலும்.
ரோட்டிலும் வீட்டிலும் ..

நடுசாமத்திலும் தென்றலோடும் 
நிலவோடும் முற்றத்து 
படுக்கையிட்டு கொஞ்சமும் 
அச்சமின்றி படலைகூட 
சாத்தாமல் இன்பமாய் 
உறங்கிய காலம் இமயம் 
ஏறி இறந்து போச்சு...

இரக்கம் இல்லாத இதயமும்
ஈன்றவனும் புசிக்கும் 
ஈனம்மில்லா நடத்தைகளும்
ஈன்றவனைகூட நம்பிடாத 
அச்சத்தில் பெண்ணினம் 
இன்று...

உணர்வை பாராமல் 
துன்பத்தை பாராமல்..
துடிப்பை பாராமல் 
துடிக்கின்ற உணர்வுகளுக்கு
துச்சநேர இன்பம் என்று 
துலங்கிட வைக்காமல்
மனிதன் என்ற பேதம் மறந்து
மிருகமாய் மாறி பேதை இனத்தை
பேதழிக்க வைக்கின்றான்...
சில மானிட ஜாதி..

துடிக்கின்ற மானினத்தை 
துவழ வைக்காதீர்
காம வில் கொண்டு
காயப்படுத்தாதீர்
பெண்ணினத்தை...

சேயாய்....
தாயாய்..
தமக்கையாய் நினையாது
விட்டாலும் தவறில்லை..
ஒவ்வொரு பெண்ணும் மானிட
ஜென்மங்கள் உணர்வுகளும் 
உள்ளங்களும் உள்ளதென்று 
எண்ணினாலே போதும். 
ஆணினமே!..

              நன்றி  
கவிதையின்பிரியை

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.