Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 01, 2018

மின்சாரம் தாக்கி மாற்றுத்திறனாளி இளைஞர் உயிரிழப்பு !!

Currently online
மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் சார்ஜ் போட்டுக் கொண்டு போன் பேசியதால், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

விஜயவாடா பிரகாஷம் மாவட்டம், கனிகிரி மண்டலம், வாகுபல்லி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கு மஸ்தான் ரெட்டி(31). மாற்றுத்திறனாளி இளைஞரான இவரது தாய் மற்றும் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட, இவர் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். 

மேலும் வேலைக்கு செல்லாத இவர், அரசாங்கம் வழங்கும் 1000 ரூபாய் உதவித் தொகையை வைத்துக்கொண்டு தனது வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந் நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு, சங்கு மஸ்தான் ரெட்டி தங்கியிருந்த வீட்டிலிருந்து வயர் கருகும் வாசனை வந்துள்ளது. அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் மஸ்தான் ரெட்டி வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் மயங்கி கிடந்தார். மேலும் அவரது இடது கையில் போன் இருந்துள்ளது. 

சார்ஜ் போட்டுக்கொண்டு செல்போன் பேசும் போது மின்சாரம் தாக்கி இருக்க கூடும் என்று கருதிய அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சங்கு மஸ்தானை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மின்சாரம் தாக்கியதில் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.