Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 31, 2018

மூக்குத்திக்காறி....!

Currently online
வரைஞ்சு வைக்கா ஓவியமே-என்
வாளத்தண்டு சித்திரமே
வாய்க்கால் கர ஓரத்தில 
நீர் குடிக்கும் பொன் குடமே

மூனுநாள் முன்னம்தான் 
முக்காட்டில் கண்டேனே 
சிறுவயசு பிள்ளையிண்ணு
சீக்கிரத்தில் தளர்ந்தேனே

மூக்குத்தி முத்தழகி -எண்ணு 
பேர் வாங்கவெண்ணோ 
மூக்கில் நீ முள்ளுக்குத்தி 
மூணு நாள் வலி கிடந்தாய்

காலில் முள்ளு குத்தினாலே 
கண்டபடி அழுதிடுவாய் இந்த
காரியத்த செய்வதற்கு 
எங்கபோய் மருந்தெடுத்தாய்

கொவ்வப்பழம் மூக்காகி 
உன் முகத்தில் வந்திடுச்சு 
உதட்டோட சாயமெல்லாம்
உன்மையற்று போயிடுச்சு

கண்ணாடி பாரேனடி 
கண்டபடி மாறீட்ட நீ -உன் 
முன்னாடி வாறதுக்கு 
சாதி சனம் பாகுறண்டி

மூணுநாள் வலியில நீ 
மூணுவருசம் உயந்திற்றடி -அந்த
முக்காட்டு பாதையில 
முறிஞ்ச மரம் ஆகுறண்டி!

           நன்றி  
-ஈழத்தமிழன் யசி-
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.