Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 31, 2018

காணிப்பிரச்சினை காரணமாக தாயின் கழுத்தை நெரித்து கொன்ற மகன்!

Currently online
தம்புள்ளை வீரகெடிய, ஹகுருவெல பகுதியில் உணவு பரிமாறிக் கொண்டிருந்த தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூத்த மகன் தாயாரைக் கழுத்து நெரித்துக் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

உணவு பரிமாறிக்கொண்டிருக்கும் போது குறித்த பெண்ணின் மூத்த மகனால் (வயது 33) தாக்கப்பட்டு பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உயிரிழந்த பெண்ணின் இளைய மகன் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

காணிப்பிரச்சினை காரணமாக குறித்த கொலை நடந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் உயிரிழந்த பெண்ணின் மூத்த மகனை கைது செய்துள்ளனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.