Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, August 06, 2018

யாழ் கோப்பாய் வீதியில் கோர விபத்து ; ஒருவர் பலி!

Currently online
யாழ்ப்பாணம் கோப்பாய் வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த நபர் தனது உந்துருளியில் பயணித்த வேளை அவருக்குப் பின்னால் பயணித்த தண்ணீர் தாங்கி வாகனம் அவரை மோதிக் கொண்டதாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

கோப்பாயிலிருந்து கைதடி நோக்கி மகளுடன் பயணித்துக் கொண்டிருந்த ரஞ்சன் (வயது 45) எனப்படும் நகைக்கடை உரிமையாளரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நகைக்கடை உரிமையாளரின் 18 வயதுடைய மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.