
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
முருகன் - பூங்கொடி தம்பதிக்கு ரஞ்சினி, கனிமொழி என்ற இருமகள்கள் உள்ளனர். லாரி டிரைவரான முருகன் தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதும் மது அருந்தவே செலவு செய்துவந்தார்.
இந்நிலையில் 9-ஆம் வகுப்பு படிக்கும் கடைசி மகளான கனிமொழி அப்பா இனி குடிக்கக்கூடாது என என் தலைமேல் சத்தியம் செய்யுங்கள் என தந்தை முருகனிடம் சத்தியம் வாங்கியுள்ளார்.
மகளுக்கு சத்தியம் செய்து கொடுத்த காரணத்தால் 3 மாதங்கள் கட்டுப்பாடுடன் இருந்துள்ளார் முருகன். ஆனால், சத்தியத்தை மீறி இரண்டு நாட்களுக்கு முன்னர் குடித்துள்ளார். இதனால் தனது தந்தையுடன் சண்டைபோட்ட மகள் கனிமொழி, மீண்டும் இப்படி செய்தால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்பிய கனிமொழி தனது சொல்பேச்சை கேட்காமல் சத்தியத்தையும் மீறி மீண்டும் தந்தை குடித்ததால் மன வேதனையடைந்து வீட்டில் உள்ள அறைக்குள் சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.