Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, August 16, 2018

யாழில் ஹெலிகொப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்ட பரீட்சை வினாத்தாள்கள்!

Currently online
யாழ். குடாநாட்டில் நேற்றும் இன்றும் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் கடல் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் நெடுந்தீவு பகுதிக்கான உயர்தர பரீட்சைக்கான வினாத்தாள்கள் கடல் வழியாக கொண்டு செல்ல முடியாமல் போனமையினால் ஹெலிகொப்டரின் உதவியுடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மாலை வீசிய கடும் காற்று காரணமாக யாழ்ப்பாணம், காரைநகர் பிரதேசத்திலுள்ள 17 வீடுகள் கடும் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தீவுகளுக்கு இடையிலான கடல் பயணம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த அனர்த்த நிலைமை தொடர்பில் யாழ்ப்பாண பாதுகாப்பு தலைமையகம் ஊடாக விமானபடைக்கு வட மாகாண கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதன் பின்னர் விமானப்படையினர் மூலம் அவர்களுக்கு சொந்தமான ஹெலிகொப்டரில் உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் நெடுந்தீவிற்கு கொண்டு செல்லப்பட்டு கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய கொண்டு செல்லப்பட்ட வினாத்தாள்கள் மூலம் மாணவர்கள் பிரச்சினையின்றி பரீட்சை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.