Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, August 30, 2018

நீங்கள் ஏழைகள்...!

Currently online
நீங்கள் 
அடிமைகளில்லை
திட்டமிட்டு அடிமைகளாக
ஆக்கப்படுகிறீர்கள்!

நீங்கள் 
நோயாளிகளில்லை.
உங்களின்
நோயெதிர்ப்புத் திறன்
குறைக்கப்படுகிறது!

நீங்கள் 
முட்டாள்களில்லை,
உங்களின்
சிந்தனைக்கடல்
சிதைக்கப்படுகிறது!

நீங்கள் 
கோழைகளில்லை.
உங்கள்
வீரத்தின் அடையாளங்கள்
வேரறுக்கப்படுகிறது!

நீங்கள் 
இயந்திரங்களில்லை,
அவர்கள் வாழ
உங்களைப் பயன்படுத்துகிறார்கள்!

நீங்கள் குரங்குகளில்லை,
ஆனால் குரங்குபோல்
பொழுதுபோக்குச் சாலைகளில்
மேய்க்கப்படுகிறீர்கள்!

நீங்கள்
குடிகாரர்களில்லை,
உங்களின் உடலுறுதி
உடைக்கப்படுகிறது!

நீங்கள்
பெண்மோக பித்தரில்லை,
உங்களின் வக்கிரம்
வளர்க்கப்படுகிறது!

நீங்கள் 
மிருகங்களில்லை
அதனினும் கொடியதாக
ஆக்கப்படுகிறீர்கள்!

உங்கள் உரிமைகள்
பறிக்கப்படவில்லை, 
மாறாக சதிகளால்
சூழ்ந்திருக்கிறீர்கள்!

உங்கள் வளங்கள்
சுரண்டப்படவில்லை,
நீங்கள் ஏமாளிகளாக
இருக்கிறீர்கள்!

உங்களுக்குப் 
பிரச்சினைகளே இல்லை,
அரசியல் புரளிகளால்
ஆட்டுவிக்கப்படுகிறீர்கள்!

நீங்கள் மதிக்கப்படுவதில்லை
மாறாக மிதிக்கப்படுகிறீர்கள்!

காரணம் ஒன்றேதான்
நீங்கள் ஏழைகள்...!

          நன்றி     
முறிகண்டி லக்சிதரன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.