Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, August 04, 2018

மின்சார சபைக்கு எதிராக மன்னாரில் போராட்டம்!(படங்கள் இணைப்பு)

Currently online
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மின் துண்டிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரில் நேற்று (03.08.2018) வெள்ளிக்கிழமை மாபெரும் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.  

குறித்த பேரணி காலை 10.30 மணியளவில்  மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இடம் பெற்றெடுத்தது.

மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக சீரான மின்சாரம் வழங்கப்படாத நிலையில் அடிக்கடி மின் தடங்கள் ஏற்பட்டு வருகின்றது. தினமும் சில மணி நேரம் அல்லது நாள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் ஆரம்பமான குறித்த பேரணி பிரதான வீதியூடாக சென்று மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடந்தது. குறித்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த பேரணியில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்கள வடமாகாண சபை உறுப்பினர்கள் சட்டத்தரணி பொது அமைப்புக்களின் பிரதி, வர்த்தகர்கள்,முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பேரணியின் இறுதியில் கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் பிரஜைகள் குழுவினரினால் மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மற்றும் மின் பொறியலாளர் ஆகியோருக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.