Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 03, 2018

வரிகள் அல்ல என் வலிகள்........!!! அ.அனோத் ஆதித்யன்

Currently online
இப்போது 
அந்த அறையில் 
யாரும் தூங்குவது இல்லை

வெறுமையாகத் தான் 
இருக்கின்றது

இப்போது 
கெட்ட வார்த்தைகள் 
எதும் என் காதில் கேட்பதில்லை

சாராய மணம் 
என் மூக்கில் வீசுவதில்லை

நடுசாமத்தில் 
தள்ளாடி வந்து 
சோறு ஊட்டி விட யாரும் இல்லை

வானொலி பெட்டியில் 
பழைய பாடல்கள் ஒளிப்பதில்லை

என்னை 
இப்போது அடிப்பதற்க்கும் 
யாரும் இல்லை

இருபத்திஒரு வயதில் 
படுக்கும் போது 
நெஞ்சில் காலை தூக்கி போட்டு 
உறங்குவதில்லை

அந்த 
சேர்ட்டில் வியர்வை 
வாசம் வீசுவதில்லை

அந்த 
துவிச்சக்கர வண்டியின் 
டயர் பஞ்சர் ஆவதில்லை

ஐஸ் பழம் விற்று 
வெயில் மிதந்து 
கொத்து ரொட்டி கட்டி வருவதில்லை

ஆம் 
இப்போது 
அம்மாவும் நெற்றியில் 
குங்குமம் வைப்பதில்லை

இப்போது 
உங்களோடு பேச வேண்டும் என்று 
ஆசையாக உள்ளது 
அப்பா

கொஞ்சம் பொறுங்கள் 
உங்களுக்கு பிடித்த 
செய்யது பீடி ஒரு கட்டும் 
ஒற்றைப் பனைக் கல்லு ஒரு போத்திலும் 
சிவாஜி கணேசனின் பாடல்களும் 
எடுத்து கொண்டு வருகிறேன்

நானும் 
நீங்களும் மனம் விட்டு பேசுவோம்

நான் கண்ணீரோடு வருகிறேன் 
உங்களை தேடி

உங்களை புதைத்த
சுடலையை நோக்கி

              நன்றி 
அ.அனோத் ஆதித்யன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.