Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 01, 2018

லாரன்சின் சவாலுக்கு ஸ்ரீரெட்டி கூறிய பதில் !!!

Currently online
நடிகை ஸ்ரீரெட்டி, நடிகர் ராகவா லாரன்ஸ் சவாலை ஏற்பதாக தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகினர் மீது பாலியல் புகார் சொல்லி வரும் ஸ்ரீரெட்டிக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. 

ஸ்ரீரெட்டியின் பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் ராகவா லாரன்ஸ், நான் தவறு செய்யவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். 

ஐதராபாத்தில் படப்பிடிப்புக்கு வந்தபோது ஓட்டலுக்கு அழைத்து பட வாய்ப்பு தருவதாக சொல்லி தன்னுடன் தவறாக நடந்ததாக ராகவா லாரன்ஸ் மீது ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்ரீரெட்டி மீது பரிதாபம் ஏற்படுகிறது என்றும் நடிப்பு திறமையை அவர் நிரூபித்து காட்டினால் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்து இப்போதே சம்பள முன்பணம் கொடுப்பேன் என்றும் லாரன்ஸ் கூறினார். 

லாரன்ஸ் சவாலை ஏற்பதாக ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நான் விசாரணைக்கு உட்கார்ந்தால் நீங்கள் நிச்சயம் தோற்றுப் போவீர்கள். நீங்கள் சரி என்றால் உங்கள் படத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். எனக்கு திறமை இருக்கிறது’’ என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.