Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 31, 2018

மகாத்மா காந்தி எழுதிய கடிதம் ஏலம்!

Currently online
பாஸ்டன், காதியின் மகத்துவத்தை வலியுறுத்தி ராட்டை என்ற பெயரில் மகாத்மா காந்தி எழுதிய திகதி குறிப்பிடாத கடிதத்தை அமெரிக்க இணையதளம் வாயிலாக ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ளது. 

அக்கடிதம் 5000 அமெரிக்க டாலருக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஏல இல்லம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

பாபுவின் ஆசீர்வாதங்கள் என்ற தலைப்பில் யஷ்வந்த் பிரசாத் என்பவருக்கு குஜராத்தி மொழியில் காந்தி தனது கையெழுத்துடன் கூடிய கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் ராட்டை மூலம் கிடைக்கும் பொருளாதார சுதந்திரம் மிக முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் வரும் செப்டம்பர் 12-ம் திகதி இணையதளம் வாயிலாக ஏலம் விடப்படவுள்ளது. அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட ஆர்.ஆர் ஏலம் அமைப்பு மூலம் இது நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.