Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 29, 2018

அவசரமாய் ஒரு காதல்....!

Currently online
எழுதத் துடித்த நிமிடங்களில்
எல்லாம் நான் கொள்ளும்
வலி போக்க
வேண்டும் அவசரமாய்
ஒரு காதல்

மனதைத் துளைக்கும்
துரோகத்தின் துவாரங்களை
நீவி விட்டு துணைக்கு
வேண்டும் அவசரமாய் ஒரு காதல்

இலக்கினை நோக்கிய என்
நகர்வில் இருந்து இடைவெளி
சற்றும் குறைய விடாது
எனை நெருக்கி கொண்டே இருக்க
அவசரமாய் வேண்டும் ஒரு காதல்

நம்மை நாம், நமக்காய் நாம்
உறுத்தலே இல்லா
காதல் உணர்வினை
தானம் செய்ய
அவசரமாய் வேண்டும்
ஒரு காதல்

போலி வட்டத்துள்
புதையுண்டு போகாது
சிதை மீட்டு என்னை
சிறை கொள்ள வேண்டும்
அவசரமாய் ஒரு காதல்

அவசரமும் அவசியமும்
காதலில் கூடாதாம்
ஆனாலும்
அன்புக்கு அது ஒன்றும்
அடிப்படையாகாது
அவசரமாய் வேண்டும்
ஒரு காதல்........

அது பெண்ணாய் தான்
இருக்க வேண்டும்
என்று அல்ல
தாய் மண்ணாய் கூட
இருக்கலாம் ........!

                   நன்றி
*****கவிப்புயல் சரண்******
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.