Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 03, 2018

யாழில் மீண்டுமொரு வாள் வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் !!!

Currently online
நேற்று யாழ்ப்பாணம், மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மிருசுவில் பகுதியை சேர்ந்த தம்பு ஜெயானந்தன் (வயது 57) மற்றும் நமசிவாயம் மகேந்திரன் (வயது 58) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.

இப் பகுதிக்கு காரொன்றில் வந்த குழுவினர், வாள் வெட்டு தாக்குதலை நடத்தியதுடன் அவ்விடத்தை விட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், பாரிய மாற்றங்கள் ஏதும் இடம்பெறவில்லையென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.