Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, August 09, 2018

உதட்டில் ஏன் பரு வருகிறது? வந்தால் என்ன செய்ய வேண்டும் என தெரியுமா?

Currently online
உதட்டின் மேல் பருக்கள் தோன்றினால் போதும் பார்ப்பதற்கு அசிங்கமாக தெரிவதோடு அதன் வேதனையும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். சாப்பிடும் போது வாயை கூட திறக்க முடியாத அளவிற்கு இந்த பருக்கள் தொல்லை கொடுக்கும். சில சமயங்களில் இதை குளிர் புண் என்று சொல்லுவார்கள்.

ஆனால் குளிர் புண்ணுக்கும் பருக்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.குளிர் புண்ணானது வாயை சுற்றி சிறிய கொப்புள வடிவில் ஏற்படும். ஆனால் பருக்கள் உதட்டில் உள்ள இறந்த செல்களால் உருவாகிறது. இது சிவந்து காணப்படுவதோடு இதன் வேதனையும் அதிகமாகவே தென்படும்.

உதட்டின் மேல் பரு தோன்ற பல காரணங்கள் உள்ளன.

ஹார்மோன் மாற்றம் (கருவுற்ற சமயத்தில், மாதவிடாய் காலங்களில்) 
சரும சீபம் எண்ணெய் அதிகமாக சுரத்தல்
சருமத்தின் வழியாக பாக்டீரியா ஊடுருவல்
பாரம்பரியம், உணவுப் பழக்கம், மாசுக்கள் மற்றும் சுற்றுச்சூழல், மன அழுத்தம், உதடுகளுக்கு பயன்படுத்தும் விலைமலிவான கெமிக்கல் நிறைந்த அழகு சாதன பொருட்கள் போன்றவற்றாலும் அங்கே பருக்கள் தோன்றலாம்.

மருந்துகள்

லித்தியம் மற்றும் கார்டிகோஸ்டீராய்டு போன்ற மருந்துகளும் உதட்டில் பருக்களை ஏற்படுத்தும். ஏன் தினமும் பயன்படுத்தும் ப்ளூரைடு டூத் பேஸ்ட் கூட நமது உதடுகளில் பருக்களை உருவாக்கும்.

எனவே இந்த வலியுடன் இருக்கும் பருக்களை முதலில் நீக்குவது முக்கியம். நீங்கள் என்ன தான் மேக்கப் போட்டு மறைத்தாலும் இது அசெளகரியத்தை ஏற்படுத்தும். எனவே இந்த பருக்களை விரைவில் அகற்ற சில இயற்கை முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

வெதுவெதுப்பான ஒத்தடம்

உதட்டில் உள்ள பருக்கள் மீது நீங்கள் வெதுவெதுப்பாக ஒத்தடம் கொடுக்கும் போது வீக்கத்தை குறைத்து இரத்த ஓட்டத்தை அங்கே அதிகரிக்கிறது.

இது பருக்களில் தேங்கியிருக்கும் சீழை உடனடியாக வெளியேற்றி சீக்கிரம் அது காய்வதற்கு உதவுகிறது.

நல்ல சுத்தமான ஒரு காட்டன் துணியை சூடான நீரில் நனைத்து புழிந்து கொள்ளுங்கள். இந்த சூடான துணியை பாதிக்கப்பட்ட பருக்கள் மீது சில நிமிடங்கள் வைக்கவும். ஒரு நாளைக்கு 3-4 முறை என இதை செய்து வாருங்கள்.

பருக்களின் மீது வைப்பதற்கு முன் கைகளை வைத்து சூட்டை தாங்க முடியுமா என்று தொட்டு பார்த்து கொள்ளுங்கள்.

குளிர் ஒத்தடம்

குளிர் ஒத்தடமும் பருக்களின் வீக்கத்தை குறைந்து எண்ணெய் சுரப்பியை சுருங்கச் செய்து அதிகமான எண்ணெய் பிசுக்கு மற்றும் பாக்டீரியாவை வெளியேற்றி விடும். பருக்களில் ஒரு நமநமப்பு தன்மையை ஏற்படுத்தி வலியை குறைத்து விடும்.

சில ஜஸ் கட்டிகளை ஒரு சுத்தமான துண்டில் கட்டிக் கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு 2-3 நிமிடங்கள் வரை சில தடவை ஒத்தடம் கொடுக்கவும்.

5 நிமிடங்கள் கழித்து இதே முறையை திரும்பவும் செய்யவும்.

இதை ஒரு நாளைக்கு சில தடவை என செய்து வரும் போது நல்ல பலன் கிடைக்கும். நேரடியாக ஜஸ் கட்டியை உங்கள் சருமத்தில் வைக்காதீர்கள். இது தோல் உரிவை ஏற்படுத்தி விடும்.

ஆவி பிடித்தல்

உதட்டில் ஏற்படும் பருக்களை போக்க ஆவி பிடித்தல் ஒரு சிறந்த முறையாகும். பாதிக்கப்பட்ட சரும துளைகளை திறந்து அது சுவாசிக்க ஆவி பிடித்தல் உதவுகிறது. சரும துளைகளை அடைத்து உள்ள எண்ணெய், தூசி மற்றும் பாக்டீரியா போன்றவற்றை நீக்குகிறது. முகத்தில் உள்ள மாசுக்கள் நீக்கி முகத்தை பொலிவாக்குகிறது.

ஒரு பெரிய பெளலில் தண்ணீர் எடுத்து நன்றாக கொதிக்க வையுங்கள். இப்பொழுது ஒரு துண்டை எடுத்து உங்கள் தலையை மூடிக் கொண்டு முகத்தை மட்டும் ஆவி பிடித்தலில் காட்டுங்கள். ஒரு 10-15 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்றாக துடைத்து விடுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை என செய்து வந்தால் உங்கள் பருக்கள் விரைவில் குணமாகி விடும்.

டீ பேக்

டீ பேக்கில் டேனின்ஸ் என்ற பொருள் உள்ளது. இது வீக்கம் மற்றும் அழற்சியை போக்க வல்லது. எனவே உதடுகளில் ஏற்படும் பருக்களை எளிதாக குறைக்கிறது.

வெதுவெதுப்பான டீ பேக்கை கொண்டு பருக்களில் ஒத்தடம் கொடுக்கும் போது சரும துளைகள் திறந்துள்ளது, அதற்கு காரணமான பாக்டீரியாவை வெளியேற்றுகிறது.

டீ பேக்கை ஒரு வெதுவெதுப்பான நீரில் முக்கி சில நிமிடங்கள் வைத்திருந்து எடுக்கவும். லேசாக ஆறிக் கொள்ளட்டும். எஞ்சியுள்ள தண்ணீரை பிழிந்து விடுங்கள். இப்பொழுது சூடான டீ பேக்கை பருக்களின் மீது வைத்து 5-10 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். பிறகு உதடுகளை குளிர்ந்த நீரில் கழுவி துணியை கொண்டு நன்றாக துடைத்து விடுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை என இதை செய்து வாருங்கள்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் பருக்களை வேகமாக குணமாக்குகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பொருள் சிவந்த வீக்கமடைந்த பருக்களின் மீது செயல்பட்டு அதன் அழற்சி வீரியத்தை குறைக்கிறது. 2014 ல் வெளியிடப்பட்ட நாளிதழான டெர்மடாலஜிகல் டீட்மெண்ட் என்ற நாளிதழின் கருத்துப்படி கற்றாழை ஜெல் பருக்களை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.

கற்றாழை இலைகளை எடுத்து கொள்ளுங்கள். அதிலிருந்து கற்றாழை ஜெல்லை மட்டும் பிரித்தெடுங்கள். அதை பருக்களின் மீது தடவவும். 20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். ஒரு காட்டன் பஞ்சை தண்ணீரில் நனைத்து சுத்தமாக துடைத்து எடுத்து விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை என சில காலங்கள் செய்து வாருங்கள்.

மஞ்சள் 

மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் பருக்களை நீக்க உதவி செய்கிறது. அதற்கு காரணமான பாக்டீரியா யவை அழித்து பருக்களின் தீவிரத்தை தடுக்கிறது. 2016 ல் வெளியிடப்பட்ட பைட்டோதெரிபி ஆராய்ச்சி படி மஞ்சளை உணவில் சேர்த்துக் கொண்டாலோ அல்லது சருமத்தில் அப்ளே செய்தாலோ சரும ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 1/2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்,  1/4 ஸ்பூன் புதினா இலை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஜோஜோபா ஆயில் சேர்த்து கலந்து கொள்ளவும். 

இந்த பேஸ்ட்டை உதட்டில் உள்ள பருக்களில் தடவவும். 10-15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவுங்கள். இதை ஒரு நாளைக்கு 2-3 தடவை என செய்து வாருங்கள். மீதமுள்ள கலவையை பிரிட்ஜில் வைத்து கூட இரண்டு நாட்களுக்கு நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மஞ்சளுடன் சம அளவு தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை என செய்து வாருங்கள்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.