Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, August 30, 2018

திருகோணமலையில் கோர விபத்து ; இளைஞன் பலி!

Currently online
திருகோணமலை-கந்தளாய் பிரதான வீதி கப்பல்துறை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளொன்றும், கார் ஒன்றும் மோதுண்டதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தம்பலகாமம் 98ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த, 24 வயதுடைய ராமச்சந்திரன் சிறிகாந்த் என்னும் இளைஞனே விபத்தின் போது உயிரிழந்துள்ளார்.

மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய எஸ்.திவாகர் என்னும் இளைஞரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், காரில் பயணித்த கந்தளாய், லைட் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய என்.ஏ.எஸ்.மதுசங்க மற்றும் அவரது நண்பர் ஒருவரும் இந்த விபத்தின்போது படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.