Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, August 16, 2018

எனக்குள் நான்....!!!

Currently online
நீண்ட பயணங்களில்
நிழலாகிய நிஜம் இவள்.

ஏதேதோ எல்லாம்
பேசிக் கொள்கிறேன்
காதலோடு கனிவோடு
காட்டத்தோடு காதோடு
சொல்கிறேன்.

எனது பேச்சுக்களில்
உணர்வுகளில்
சிந்தனைகளில்
அத்தனை மதிப்பு
இவளுக்கு என்பதை
இவள் மௌனமான
செவிமடுத்தல்கள்
சொல்கிறது.

எனது மௌனம்
நீளுகின்ற
பொழுதுகளிலேயே
எனக்குள் சிந்தனை
அறிவுரைகளை
அள்ளி தெளிக்கின்றாய்.

நான் கோபித்து
கொண்டால் அமைதியே
நிலையாகி
சாந்தம் கொள்கையில்
சாமர்த்திய அறிவு
பருக்குகின்றாய்.

தீயவர்களுடனான
உரையாடல்கள்
நல்லவர்கள் மீதான
என் திருவிளையாடல்கள்
அத்தனைக்கும் என்
தனிமை பொழுதுகளில்
அருகிருந்து
தடை விதிக்கின்றாய்.

என் தனிமை நகர்வுகளை
சாதகமாக்கி கொண்டு
எனக்குள் எழுந்து
நற் பாடங்களை கற்றுத்
தருகின்றாய் மனசாட்சியாய்.
ஏனோ எனக்குள் நான் என்றும்
அடங்கியே போகிறது..!!!!


             நன்றி
~~~சுஜா தவம்~~~~

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.