Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 10, 2018

கண்ணீரில்_கரையட்டும்...!!!!!!!

Currently online
இதுவே இறுதி முறை..
இன்றோடு அழுது 
தீர்த்துவிடுகிறேன்...!

மனதில் கொழுந்துவிட்டெரியும் - உன் 
துரோகத்தீயை - என் 
கண்ணீரைக் கொண்டு
தணித்துவிடுகிறேன் ..!

மரத்துப் போன மனதின் கனம்
பிரித்தெறிய முடியாத 
முட்கிரீடமாக ஆழமாய்
கீறிச் செல்கிறது..!

கடக்கும் நொடிகளை 
திடமாக கழிக்க முயன்றும்..
வலித்த கணங்கள் 
நினைவுகளாக வந்து
வலிந்து திணிக்கப்படுகிறது ...!

தந்த வரை அனைத்தும் போதும் ...
தாங்கிக் கொள்ள முடிந்த வரை 
தாங்கிவிட்டேன்...!

வடுக்களின் மீது
தனிமையெனும் ஒத்தடம் போட 
தயாராகிவிட்டேன் ...!

உன்னைப் போல் 
ஒருவனிற்காக - நான் 
ஏன் அழ வேண்டும் ..?
இந்த கேள்வியே என்னை 
மேலும் மேலும் 
வலிமையாக்க போகிறது ..!

இதுவே இறுதி முறை..
இன்றோடு அழுது - நான்
தீர்த்துவிடுகிறேன்...!

        நன்றி 
தோழி கவிதாயினி
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.