Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 08, 2018

வித்தியாசமான கவிதை.....நிதானமாக படியுங்கள்..!

Currently online
நிதானமாக படியுங்கள்
ஒரோ நேரத்தில்
#அங்கே
#இங்கே
என்று கதை நகர்ந்து கொண்டிருக்கும்
உணர்ந்து வாசித்தால்
நீங்களும்
#அங்கே
#இங்கே
என போய் வருவீர்கள்

நள்ளிரவு
11.58 மணி இருக்கும்

எனது அலைபேசி இடைவிடாது
அழைப்பு மணி
ஒலித்தது

மோட்டார் வாகனத்தை நிறுத்தி விட்டு
அழைப்பை அனுமதித்தேன்

" மாப்ள எங்க இருக்கிங்க"

"வந்திட்டிருக்கே மாமி
ஏ என்னாச்சி பதட்டமா பேசிறிங்க"

"திவ்யாக்கு ரொம்ப முடியல
ஆஸ்பத்திரி கொண்டு போய்ட்டு இருக்கோம்
கொஞ்சோ சீக்கிரமா வாங்க மாப்ள"

"இதோ இப்போ வாரே"

"இது தல பிரசவம்
வலியால துடிக்கிறா பயமா இருக்கு"

"ஒன்னுமில்ல எதுக்கும் பயப்டாதிங்க
எல்லாம் நல்லதா நடக்கும்
இன்னும் பத்து நிமிசத்தில
அங்க வந்திடுவே"

அப்பா ஆகப்போகிறேன் என்ற
சந்தோஷத்தில் என்ன செய்வதென்றே
புரியவில்லை

பயணத்திற்கு தயாரானேன்

அப்போது யாரோ
ஒரு பெண்ணின் குரல் கேட்டது

இது ஒத்தையடி பாதை
ஊருக்கு வெளிப் பக்கமாக உள்ளது
இந்த இரவில்
ஒரு பெண்ணின் அழுகுரல்

நான்
நன்றாக பயந்து விட்டேன்
இருப்பினும் அந்த குரல் கேட்கும்
இடத்தை நோக்கி நகர்ந்து சென்றேன்

அலைபேசியின் டார்ச் லைட் மூலம்
அந்த குரல் கேட்ட இடத்தை பார்த்தேன்

ஒரு பெண்
தரையில் விழுந்து கிடந்தால்

அலங்கோலமான தலை முடி
ஆங்காங்கே கிழிந்த ஆடைகள்
உடம்பில் சாதுவான துர்நாற்றம் வீச
கைகளை தரையில் அடித்து அடித்து
கத்தினாள்

நன்றாக உற்றுப் பார்த்தேன்

நிறைமாத கர்ப்பனி அவள்
பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தால்

அவளது தேற்றத்தைப் பார்க்கும் போது
அவள் புத்தி சுகயீனம் அற்றவள் போல்
தெரிகிறது
ஆம் மூலை வளர்ச்சி அற்றவள்
பதினெட்டு வயதுதான் இருக்கும்

மீண்டும் அலைபேசி அழைப்பு

"மாப்ள சீக்கிரம் வாங்க"

"வந்திட்டிருக்கே"

மோட்டாரை நோக்கி நடந்தேன்

அவள் வலியாள் அலறினால்

"இந்த
குழந்தை மனம் கொண்டவளையும்
யாரோ கற்பழித்து கர்ப்பமாக்கி இருக்கானே
கடவுளே நீ இருக்கியா இல்லையே"

என எனக்குள் நானே
கேள்வி கேட்டு விட்டு

அவள் அருகில் சென்றேன்

அவளை மோட்டாரில் வைத்து
வைத்தியசாலைக்கும் கொண்டு செல்ல
முடியாத நிலையில் அவள் இருந்தால்

இந்த வழியாக
யாரும் வருவதையும் காணவில்லை

"அம்மாடி ஒன்னுமில்ல மா"

"வலிக்கிது ஆ.... அம்மா.... "

ஐயோ நான் இப்போது என்ன செய்வேன்
முடிந்ததை செய்வோம் என்று
முடிவெடுத்து விட்டேன்

பாவாடையை மேலே தூக்கி விட்டு
உள் ஆடையை கலட்டினேன்

அவள் என் கையை
இருக பிடித்திருந்தாள்

தலையை மெதுவாக தடவி

"அம்மாடி அண்ணே சொல்றத
ஒரு தடவ கேளுமா
மூச்ச நல்லா உள்ள இழுத்து
முக்கி தள்ளுமா"

"வலிக்கிது ஐயோ..... வலிக்கிது
எனக்கு வேணா வலிக்கிது ஆ......."

"அம்மாடி அம்மாடி ஒன்னுமில்ல
கொஞ்சோ வலிய பொருத்துக்கம்மா
நீ மூச்ச இழுத்து
நல்லா முக்கி வெளிய தள்ளுமா
அப்போ தா குழந்த வெளிய வரு"

"வலிக்கிது ஐயோ............... "

இப்போது
#அங்கே

"சம்மந்தி என்ன இன்னு
மாப்ளய காணல"

"அதான் எனக்கு தெரியல
வந்திட்டு இருப்பான்னு நினைக்கிறே"

வெள்ளை ஆடைகளில்
தாதிய பெண் அங்குமிங்கும்
ஓடித் திரிகிறாள்

"நர்ஸ் சீக்கிர அத கொண்டு வாங்க"
என்றார் டாக்டர்

ஓரிரு நிமிடங்கள் கழித்து

மாமியும் அம்மாவும்

"ஏம்மா ஏதாச்சு சொல்லிட்டு போ தாயி"

"தொப்புள் கொடி கழுத்த சுத்தி இருக்கு
இப்ப ஒன்னு சொல்ல முடியாது
நீங்க ரெண்டு பேரு அங்க போய் இருங்க
போங்க போங்க "

"சமந்தி அனோத் எப்ப வருவான்னு தெரில
அந்த பக்க ஒரு புள்ளையார் கோயில்
ஒன்னு இருக்கு
நா கும்பிட்டு வாறே"

"ம்"

#இங்கே

வலி தாங்க முடியாமல்
அவள் துடித்துக் கொண்டிருந்தால்

நான் அவளது
கால்களை நன்றாக அகட்டி பிடித்து
வயிற்றில் கை வைத்து தள்ளினேன்

ஒரு பெரிய சத்தமிட்டாள்

மெதுவாக
குழந்தையின் தலை
வெளியே வந்தது

"அம்மாடி அப்டித்தா இன்னும் கொஞ்சந்தா"

"எனக்கு வலிக்கிது .........."
என்றவள்
மெதுவாக மயங்கிக் கொண்டிருந்தால்

குழந்தை வெளியில் வந்து
அரைவாசியில் இருக்கிறது
அவள் மயங்கிக் கொண்டிருக்கிறாள்

அவள் கன்னத்தில்
சரமாறியாக அடித்தேன்
மீண்டும் மீண்டும் அடித்தேன்

மயக்கம் அடையாமல்
பழைய நிலைக்கு திரும்பினால்

அம்மா....... என்ற
மிகப்பெரிய சத்தம்
வலியின் உச்சத்தை தொட்டால்

எனது கைகளில்
இளஞ்சிவப்பு நிறத்தில்
ஒரு பெண் குழந்தை

என்னை அறியாமல்
என் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள்

எனது சேர்ட்டை கலட்டி
குழந்தையை பக்குவமாக சுத்தி தூக்கினேன்

#அங்கே

மிகுந்த பதற்றத்திற்க்கு பிறகு

பிரசவ அறையில் பெரிய அலறல் சத்தம்

தாதியப் பெண்
பச்சை நிற துணியில்
ஒரு குழந்தையை எடுத்து வந்து
மாமியிடம் கொடுத்தாள்

#இங்கே

ஒரு வழியாக
தொப்புள் கொடியை அறுத்து

அவளிடம் குழந்தையை காட்டினேன்

"அம்மாடி இங்க பாரு குட்டி பாப்பா"

அவள் ஒன்றும் பேச வில்லை
மயங்கி இருந்தால் என்று நினைத்தேன்

ஆனால்
மூச்சி விட வில்லை

ஆம்
அவள் இறந்து விட்டாள்

என் அலைபேசி மணி ஒலித்தது
மாமியின் அழைப்பு தான்

"மாப்ள"

"சொல்லுங்க மாமி"

"குழந்த செத்துப் போச்சி மாப்ள"

#உங்கள்
ச.அனோத் ஆதித்யன்
முடிவு
என்னவென்று
உணர்ந்து முடித்தவர்கள்
புரிந்து கொள்வார்கள்

     
        நன்றி
 Anoth Aathithya Varman
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.