Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 15, 2018

இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்து ; மூவர் படுகாயம்!

Currently online
இன்று அதிகாலை தம்புள்ளை - ஹபரண பிரதான வீதியின் பெல்ஹர பகுதியில் லொறி இரண்டு நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். 

இவ் விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மூவரும் தபுள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹபரணயில் இருந்து தம்புள்ளை நோக்கி நெல் ஏற்றிச்சென்ற லொறி ஒன்றும் தம்புள்ளையில் இருந்து ஹபரண நோக்கி நூடில்ஸ் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதியுள்ளன. 

விபத்தில் பலத்த காயமடைந்தவர்களின் நிலமைகள் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.