Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 03, 2018

மெய்சிலிர்க்கும் வரிகள்.............!!!! அனோத் ஆதித்யன்

Currently online
சபிக்கப்பட்டு பிறந்த மனித குட்டியே 
நீ பெண்ணாக பிறந்தது தான் 
உன் சாபம்

சொல்கிறேன் கேள்

பேருந்து பயணத்தில் 
இடிப்பார்கள் 
தெடுவார்கள் 
தடவுவார்கள் 
உரசுவார்கள் 
நீ பெண் என்பதால்

நடைபாதையில் 
உன் பின்னலகில் 
தட்டிவிட்டு ஓடுவார்கள் 
நீ பெண் என்பதால்

ஒரு நாய் குட்டியை 
நீ குனிந்து தூக்குவது என்றாலும் 
கவனமாக குனி 
சில கண்கள் எதையோ எட்டிப் பார்க்கும் 
நீ பெண் என்பதால்

காற்று வீசும் போதும் 
கவனமாக இரு 
ஆடை விலக வாய்புண்டு 
அந்த தருணத்திற்காய் 
ஓநாய்கள் காத்திருப்பதுண்டு
நீ பெண் என்பதால்

உறங்கும் போதும் 
ஒரு கண்ணை விழித்திரு 
மரணத்தின் ஒத்திகை நித்திரை எனின் 
அந்த தருணத்தில் 
உன்னை மரணம் குடித்து 
மதனம் செய்ய காத்திருக்கும் சில பாம்புகள் 
நீ பெண் என்பதால்

பொது மலசலகூடத்தில் 
சிறுநீர் கழிக்கின்றாயா 
முதலில் எல்லா இடமும் சுற்றிப் பார் 
இணையத்தள கண்கள் 
அங்கே பொருத்தப் பட்டிருக்கும் 
நீ பெண் என்பதால்

குழந்தைக்கு 
பால் கொடுக்கும் போது
கழுத்தோடு மறைப்பிட்டுக் கொள் 
கழுகுகள் கண் எறியும் 
திறண்ட மார்புகளை காண
நீ பெண் என்பதால்

பாடசாலை செல்லும் போது 
மழையில் நனைந்து விடாதே 
வெள்ளை ஆடை 
ஆசிரியரோ நண்பனோ 
கண்களை விரித்துப் பார்க்க கூடும்
நீ பெண் என்பதால்

உணர மறுக்கும் 
ஒரு உண்மை சொல்லட்டுமா?

மாதம் மூன்று நாள் 
அடிவயிறு அலற 
உயிரை பறிற்தெடுக்கும் வலியை கூட
உணர மறுக்கும் ஒரு சில ஆண்கண் உண்டு

அதை விட 
கொடுமை என்னவென்றால்

அந்த வலியை 
அசிங்கமாக பார்க்கும் 
ஆண்களும் உண்டு

காரணம் 
சபிக்கப்பட்டு 
பெண்ணாக பிறந்து விட்டதால்

நீ 
பெண் என்றால் 
கருவறையிலும் பாதுகாப்பாக இரு

எதற்கோ 
அலையும் மனித குட்டிகள் இங்கு அதிகம்

            நன்றி 
ச.அனோத் ஆதித்யன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.