Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 15, 2018

பிரியங்கள்...!!!!

Currently online
நிறைய மாற்றங்கள்
தந்தது அந்தப் புன்னகை
பூக்களின் வாசத்திற்கு அடிமையாவதுண்டு
புன்னகைக்கு அடிமையானது
இத்தடவை

உனக்கு நினைவிராது
நெருக்கம் நேசங்ளை
உருவாக்கியே உறவாடி
தவிக்க விடும் என்பதாலே
பல நட்புக்கள்
வழிப்போக்கர்கள் போல்
இடையிலே
தவிர்க்கப்பட்டிருக்கின்றன

நீண்டு கொண்டிருக்கும் இந்த
உறவுக்குள்ளும்
ஏதோ ஒன்று ஊசலாடிக்
கொண்டிருக்கலாம்

உன் புன்னகையின் சிதறலுள்
மனம் சிக்கித் தவிக்கையில்
அதன் ஆக்ரோசத்தை உணர்ந்திருக்கிறேன்

இப்போது நான் நீர்
படாத செடியாய்
நிறைமாத கர்ப்பிணியாய்
அந்தரமும் அவாஸ்தையுமாய்
விலகி நின்று வேடிக்கை பார்ப்பவனானாய் நீ!

    நன்றி
திலகா அழகு

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.