Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, August 09, 2018

வெளிநாடு_எனும்_சிறையில் .......!!!!!!

Currently online
கடல் தாண்டி கண்டம் கடந்து 
சென்று நாம் வாழ்கின்ற போதும் 
ஈழத்தாய் ஊட்டிய வீரமதை
இறுதி மூச்சுள்ளவரை ஏற்று
உறுதிக் கொள்கையைப் பற்றியே 
எம் உணர்வுகள் நாளும் நகர்கின்றது

புலம்பெயர் தேசமதில் 
புத்தாடை அணிந்து பூவாசம் 
நாம் வீசிவிடவில்லை 
இன்றும் உரிமைக்காய் புலம்புகிறோம்
வெளிநாடு என்றால் தனிநாடு
என்று நினைத்திட வேண்டாம்

நதி இல்லாத ஓடங்களைப் போல்
கரை சேராத அலைகள் நாம்
நடுக் கடலில் தனித்து நிற்கும் 
சிதைக்கப்பட்ட படகைப் போல 
நாங்கள் அழுவதை யாருமே
அறிந்திடப் போவதில்லை

அலைபேசியில் அம்மாவின் குரல்
தங்கைக்கு திருமணம் என்று 
செல்லத் தம்பியின் படிப்பு வேறு
கதைத்து முடித்தவுடன்
அக்காவின் அழைப்பு 
அத்தானுக்கு சுகமில்லை என்று 
இவைகளையும் தாண்டி 
ஆனந்தம் என்பது அந்த 
உயர்ந்த முகில்களைப் போலவே

சிலர் எளிதில் கூறிவிடுகிறார்கள்
வெளிநாட்டவர் என்று 
எங்கள் வியர்வையிடம் 
கேட்டால் கூறும் உடல்களின் வலியை
இரவு பகல் தூக்கமில்லை 
சிலவேளை உணவில்லை
ஓய்வெடுக்க நேரமுமில்லை
விடுமுறை என்று எதுவுமில்லை

தூரத்தில் இருந்தாலும் 
எம் தாயகத்தை மறப்பதில்லை
இங்கு மாளிகையில் வாழ்ந்தாலும்
வன்னியூர் குடிசையின்
குதூகல அன்பிற்கு நிகராகுமா
வசந்த மலர்கள் ஆயிரம் பூத்தாலும்
ஈழ வயல்வெளிக் காற்றுக்கு ஈடாகுமா

எங்கள் கனவுகள் களவாடப்பட்டது
விமானத்தினாலும் கப்பலினாலும்
ஈழத் தாயக அன்னையால் 
தமிழர் நாம் என்றும் கடந்தவிடவில்லை
ஈழ மண்ணின் வரலாற்றுப் 
பார்வைகளோடு புலத்தில் 
போராடுகிறோம் தமிழராக...!

             நன்றி    
வன்னியூர் கிறுக்கன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.