Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 29, 2018

இளைஞனே சற்று நில் !

Currently online
ஓ... இளைஞனே நீ செல்வதெங்கே... 
வந்த வழி மறந்து விட்டாய் 
செல்லும் வழி தொலைத்து விட்டாய் 
ஏதேதோ எண்ணங்களில் சிறுமையாக வாழுகின்றாய் !

வீரத்தை உலகுக்கே உணர்தியவர் பூமியிலே 
மண்ணுக்காய் மரணித்த மறவர்களின் தேசத்திலே - இன்று
ஓடுகின்ற கூட்டத்தோடு வாளெடுத்து ஓடுகின்றாய்
மதுவுக்கு அடிமையாகி மாதரையும் சீரழிக்கின்றாய் !

உணவின்றி உணர்வுக்காய் உயிரையும் துறந்தார்கள் 
எதிரியை போர்முனையில் அலறியோட வைத்தார்கள் - நீயோ
பலபேர் கூட்டாகி அப்பாவியை 
பந்தாடி
அராஜகத்தில் அடிமைப்பட்டு அழிவைத்தேடி விரைகின்றாய் !

உன் தந்தையிடம் கேட்டு நீயும் 
நம் முந்தையரின் வீரம் படி 
வம்பிழுத்து வீதியிலே வீணாக சண்டையிட்டு 
அடாவடிகள் புரிவதொன்றும் வீரமில்லை கோழைத்தனம் !

தமிழனை அழிப்பதற்கு தமிழனே வழியென்று
கைகொட்டிச் சிரிக்கிறார்கள் கயவர்கள் மகிழ்ச்சியிலே
அறியாமல் ஆடாகி வேள்விக்கு பலியாகி 
திட்டமிட்ட சதிக்குள்ளே சிக்குண்டு அழிவதேனோ ?

வா... இளைஞனே அறிவைத் தேடு... 
அகிலத்திலே உயர்ந்திட வழியைத் தேடு...
தலைசிறந்த தமிழ் மொழியைப் போற்றிப்பாடு...
தரணிபோற்ற உத்தமனாய் வாழ்ந்து காட்டு !


                   நன்றி 
- வேலணையூர் ரஜிந்தன்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.