Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 10, 2018

அவசர_உலகில்_ஆனந்தம்_பாதிதான்....!!!

Currently online
விடுமுறை என்றதும்
எத்தனை சந்தோசம்
ஊருக்கு போகலாம்
உறவுகளைக் பார்க்கலாம்

அவசர உலகில் 
ஆனந்தம் அதிகம் 
விரைந்து சென்று
விடுமுறை கழித்திட

காலனோ கணக்கொன்று போட
கடுகதி வாழ்வில் 
சடுதியில் பல மோதல் 
பாதி உயிர் பிரிந்து
மீதி உயிர் ஊசலாட..

அங்கங்கள் இழந்து
துன்பங்கள் சேர
விடுமுறைகள் எல்லாம் 
மருத்துவ மனையும்
இழவு வீடுமாக
இடையில் போக...

ஏன் இந்த அவசர வாழ்க்கை 
எத்தனை எத்தனை உயிர்கள் 
இடையில் பறி போகுதே
நடக்கும் விபத்தையெண்ணி
இதயம் வெந்து போகுதே

நாளும் பொழுது 
வரும் செய்திகள்
பார்த்து நெஞ்சம் பதைக்கிறது
தூங்காது துயரம் சுமக்கிறது உறவுகளே...

வேண்டாமே இந்த அவசரம்
இருப்பவை இருக்கும் 
மெதுவாக சென்று பார்த்து 
ஆனந்தத்தோடு திரும்பலாமே...!!!

            நன்றி 
&..ஜெசுதா யோ...&&
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.