Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 01, 2018

யாழில் இடம்பெறும் வாள்வெட்டு, கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை !!

Currently online
யாழ்.பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட மோட்டார் சைக்கிள் படையணி களமிறங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக இனந்தெரியாத நபர்களால்  யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. 

இந் நிலையில் சுமார் 10 மோட்டார் சைக்கிள்கள் அடங்கிய விசேட பொலிஸ் அணியொன்று யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் விசேட ரோந்து நடவடிக்கைகளுக்காக களமிறக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 100 இற்கும் அதிகமான சிவில் பொலிஸ் அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு வாரங்களுக்குள் குறித்த குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளார்கள் எனவும் யாழ்.பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.