Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, August 11, 2018

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் பதற்றம்!

Currently online
கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனமொன்றின் சாரதியை, மக்கள் மத்தியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் தாக்கியுள்ளமையினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஏ35 வீதியால் மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனமொன்றை பின்தொடர்ந்து வந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் வைத்து டிப்பர் வாகனத்தை மடக்கிப் பிடித்து சாரதியை தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம் காணப்பட்டதால், அங்கு ஒன்று கூடிய மக்களினால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதியை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து சென்றுள்ளனர். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.