Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, August 04, 2018

உடைந்து போன கனவுகளை ஏந்தி மண்டியிடப்போவதில்லை......!!!(ரிஸ்க்கா முக்தர்)

Currently online
ஒரு நகப்பூச்சை 
நீக்குவது போல..!!!

ஒரு சிகையலங்காரத்தை 
கலைப்பது போல..!!!
ஒரு முகப்பூச்சை 
கழுவிக்கொள்வது போல..!!!

அத்தனை எளிது தான் 
உங்கள் வாழ்விலிருந்து
என்னை அகற்றி விடுவதும்..!!!

எத்தனை வாக்குறுதிகள்...!!!
எத்தனை பிரார்த்தனைகள்...!!!
எத்தனை கனவுகள்..!!!

அத்தனைக்குப் பின்பும் 
விலகுவதெப்படியென
நீங்கள் சற்றும் தயங்க வேண்டாம்...!!!

பிரிவிற்கான காரணங்கள் கேட்டு
பாதி வழியில் உங்களை நான் 
நிறுத்தப் போவதில்லை..!!!!

நேசத்திற்கான நியாயத்தினை வேண்டி
நீங்கள் சாத்திக்கொண்ட கதவுகளை 
நான் தட்டிக்கொண்டிருக்கப் போவதில்லை..

உடைந்து போன கனவுகளை ஏந்தி
சிறு கருணைக்காய் 
ஒருபோதும் 
நான் 
உங்கள் முன்னால் 
மண்டியிடப்போவதில்லை..!!!

ஆதலால் 
இதில் நீங்கள் வருத்தப்படவோ..
குற்றவுணர்வில் தலை குனியவோ..
இனியொரு முறை முகம் பார்ப்பதெப்படியென
தயங்கி நிற்கவோ வேண்டியதில்லை..!!!

ஒரு நகப்பூச்சு நீங்குவதை போல..!!!
ஒரு சிகையலங்காரம் கலைவதை போல..!!!
ஒரு முகப்பூச்சு கழுவப்படுவதை போல..!!!

விலகிக்கொள்ள
அத்தனை எளிதாய் 
இருக்கிறது 
எனதிந்த இருப்பு..!!!

ஆம்
நேசம் கொன்று உடனிருப்பதை விட
நேசத்தோடு விடை பெறுதலில்
எனக்கெந்த வருத்தமும் இல்லை!!!



நன்றி 
(ரிஸ்க்கா முக்தர்)
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.