Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, August 18, 2018

கேரள வெள்ளத்தில் பிறந்த ஆண் குழந்தை!

Currently online
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை, பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக அம் மாநில பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகளின் மீட்புப்படைகள் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை செய்து வருகின்றனர்.

இந் நிலையில் கேரள மாநிலத்தின் ஆலுவா என்ற பகுதியில் வெள்ளத்தில் சிக்கி பனிக்குடம் உடைந்த நிலையில் ஒரு பெண் தவித்து வருவதாக தகவல் வந்தது. இதனையடுத்து உடனடியாக அந்த பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்ற இந்திய கடற்படையினர் அந்த கர்ப்பிணி பெண்ணை கயிறு மூலம் மீட்டனர்.

மீட்கப்பட்ட கர்ப்பிணி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நிமிடங்களில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 

குழந்தையும் தாயும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.