Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 03, 2018

மர்மமான முறையில் உயிரிழந்த குடும்பஸ்தர் : அச்சத்தில் உறவினர்கள் !!!

Currently online
திடீரென மர்மமான முறையில் 26 வயதான குடும்பஸ்தர் ஒருவர்  உயிரிழந்துள்ளமை வவுனியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவிலுள்ள மாதர்பனிக்கர் மகிழங்குளம் பகுதியில் வசித்து வந்த ஜெ. நிரோசன் என்பவரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை மாதர்பனிக்கர் மகிழங்குளம் பகுதியில் வசித்து வந்த குறித்த நபர் உறவினர் ஒருவரது வீட்டில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றின் மதுபான விருந்துபசாரத்தில் கலந்து கொண்டுள்ளார்.

இதில் உறவினர்களுடன் கலந்து கொண்டு மது அருந்திய பின்னர், அவரது வீட்டிற்கு உறவினர்கள் கூட்டிச்சென்று விட்டுள்ளனர், எனினும் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதையடுத்து அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் அருந்திய மதுபானத்தில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் எனவும் உயிரிழந்தவரின் குடும்பத்தார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.