இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் 55 வயதான ஸ்ரீயானி கொடிக்கார எனதெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கொழும்பின் புறநகர் பகுதியாகவுள்ள கொட்டாவ பிரதேசத்திலேயே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை மூன்று மணிக்கும் நான்கு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலையைப் புரிந்தவர் அந்தப் பெண்ணின் மகளது காதலன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் தனது காதலியையும் வெட்டிப் காயப்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காயமடைந்த பெண் ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாயாரின் சடலம் வைத்தியசாலைப் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொட்டாவை, சுஹத பிளேஸ், சிறிமல்வத்தை பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த தாய்க்கும் மகளுக்குமே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சந்தேக நபர் அவ்விடத்திலிருந்து அதிகாலையிலேயே தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைத் தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.