Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 03, 2018

ஆவா குழுவை இயக்குவது நிதி நிறுவனங்களா ?? திடுக்கிடும் தகவல் !!

Currently online
கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட   அமைச்சர் மங்கள சமரவீர, வடக்கு, கிழக்கில் குறிப்பாக வடக்கில், நிதி நிறுவனங்களிடம் நுண் கடன்களை பெற்றுக்கொள்ளும் பெண்களை அச்சுறுத்தி, வட்டி மற்றும் கடன்களை பெற்றுக்கொள்ளும் பணிகளில் ஆவா குழுவை ஈடுபடுத்தி வருவது குறித்து தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நுண் கடனை   70 வீதமானவர்கள் குறிப்பாக  வடக்கிலும் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பெற்றுள்ளனர். இந்த கடன்களுக்கு 40 வீதத்தில் இருந்து 200 வீதம் வரையில் அநீதியான வட்டி அறவிடப்பட்டுள்ளது.

விசேடமாக வடக்கு, கிழக்கில் வறுமையில் உள்ள மக்களுக்கு அடகு வைக்க காணிகள், சொத்துக்கள் இல்லாத காரணத்தினால், வங்கிகள் மூலம் கடன்களை பெற முடியாதுள்ளது.

நுண்கடன் நிறுவனங்களிடம் இலகுவாக கடனை பெற முடியும் என்பதால், மக்கள் கடன்களை பெற்றுக்கொண்டுள்ளனர். கடனை செலுத்த முடியாத பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

இதனால், நுண்கடன்களை வழங்கும் நிறுவனங்களை வரையறுக்கவும், வட்டி வீதங்களை நிர்ணயிக்கவும் தீர்மானங்களை எடுத்துள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.