Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, September 03, 2018

இன்றைய ராசிபலன்...! (09.03.2018)

Currently online
மேஷம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

ரிஷபம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

மிதுனம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் பகைத் துக் கொள்ளாதீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. சகோதர வகையில் சங்கடங்கள் வரும்.
வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

கடகம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

சிம்மம்

கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியா தைக் கூடும்.முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கன்னி

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திவரும். வர வேண்டி பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

துலாம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும் உதவி செய்வதாக வாக்குக்  கொடுத் தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம்.முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

விருச்சிகம்

எதிர்ப்புகள் அடங்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். 

தனுசு

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மகரம்

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். கனவு நனவாகும் நாள்.

கும்பம்

உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக் கொள்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமை யும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

மீனம்

தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புது வாகனம் வாங்குவீர்கள் மனதிற்கு இதமான செய்தி வரும். புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றிஅடையும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்க மாவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.