Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, September 07, 2018

இன்றைய ராசிபலன்..! (09.07.2018)

Currently online
மேஷம்

பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள்  மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.  

ரிஷபம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோ கத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சிறப்பான நாள்.  

மிதுனம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வாகனப்பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோ கத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள். 

கடகம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மற்றவர்களை முழுமையாக நம்பிக்கொண்டிருக்க வேண்டாம். தாழ்வு மனப்பான்மைவந்துச் செல்லும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். எதிர் பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

சிம்மம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள்.முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில்  வேலைச்சுமை அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.  

கன்னி

திட்டமிட்ட காரி யங்கள் கைக்கூடும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். புகழ், கௌரவம் கூடும் நாள்.  

துலாம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.  உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். சாதித்துக் காட்டும் நாள். 

விருச்சிகம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். விருந் தினர் வருகை அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய  வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோ கத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மகிழ்ச்சியான நாள்.  

தனுசு

சந்திராஷ்டமம் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி  வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

மகரம்

பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள் வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல் யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் பழைய பாக்கிகள்  வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். 

கும்பம்

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப் புகளை ஏற்பீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்க மாவீர்கள். அமோகமான நாள்.   

மீனம்

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்றுமுடிவெடுப்பீர்கள்.நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். புதுமை படைக்கும் நாள்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.