Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, September 09, 2018

இன்றைய ராசிபலன்....! (09.09.2018)

Currently online
மேஷம்

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்றுமுடிவெடுப்பீர்கள். உறவி னர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறை
வேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப் படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரி கள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்

நண்பர்களின் ஆதரவுக் கிட்டும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பழையகடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியா பாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோ கத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். 

மிதுனம்

குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோ கத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.   

கடகம்

இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு
கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந் துக் கொள்வார்கள். மகிழ்ச்சியான நாள்.   

சிம்மம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

கன்னி

எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துச் செல்லும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள். 

துலாம்

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பயணங்களால்மகிழ்ச்சி தங்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.     

விருச்சிகம்

புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பழைய உறவினர்,நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நம்பிக்கைக் குரியவர் களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள்  கைஓங்கும். முயற் சிகள் பலிதமாகும் நாள். 

தனுசு

கணவன்-மனைவிக்குள் ெநருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னை களுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண் பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். உத்யோகத்தில் தலை மையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.  

மகரம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரு விதபடபடப்பு வந்து செல்லும்.சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். போராட்டமான நாள். 

கும்பம்

பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டி ருந்ததை வாங்கித் தருவீர்கள்.புது  நட்பு மலரும்.  வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள். 

மீனம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். எதிர் பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.