Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, September 02, 2018

10 வகையான மருந்துப் பொருட்களின் விலை குறைவு!

Currently online
புற்றுநோய்க்கான 10 வகையான மருந்துப் பொருட்களின் விலையும் 25 மருத்துவ உபகரணங்களுக்கான விலையும் நேற்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. 

பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் 39 ஆவது ஒசுசல கட்டடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோது சுகாதார அமைச்சர், டொக்டர் ராஜித சேனாரத்ன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புற்றுநோய்க்கான 13 ரகங்களை சேர்ந்த மருந்துகளின் விலைகளும் குறைக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

நீரிழிவு நோய்க்கான குருதி பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் குளுக்கோஸ் மானி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களின் சில்லறை விலைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

குருதியில் காணப்படும் குளுக்கோஸின் அளவை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் மானி ஒன்றின் சில்லரை விலையான 2,750 ரூபாவிலிருந்து 48 வீதம் குறைக்கப்பட்டு 2,510 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், நீரிழிவு நோயாளர்களுக்கான 10 மில்லிமீற்றர் அளவிலான இன்சுலின் ஊசியின் விலை 1,200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 10 மில்லிமீற்றர் அளவிலான இன்சுலின் ஊசி 600 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.




jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.