Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, September 07, 2018

ஒரு கதை சொல்லப் போறன் - (பாகம் 10)

Currently online
நலம் விசாரித்து பலவற்றை பேசிக் கொண்டிருந்தார்கள் ரத்தினத்தின் மாமாவும் ஆறுமுகமும்.
இடையில் அவளை ஆறுமுகம் அழைத்தான்.
அவளுக்கு நடுங்க தொடங்கியது.விழிகள் பிதுங்க ஆறுமுகத்திடம் சென்றாள்........

ஆறுமுகத்திற்கு அருகில் சென்றவள் எதுவும் பேசாது முழித்துக் கொண்டு நின்றாள்.
இடையில் ரத்தினத்தை ஒரு பார்வையும் அவன் மாமாவை ஒரு பார்வையும் பார்த்து வைத்தாள்.வியர்த்து கொட்டியது அவளுக்கு ஏன் அப்பா அழைத்திருப்பார் என்று.ஆனால் ஆறுமுகம் அவள் வந்து நிக்க அவளை கவனிக்காது கதை அளந்து கொண்டிருந்தார்.அவள் சின்னம்மாளை மெதுவாக நோட்டம் விட்டாள்.சின்னம்மாள் தான் சொன்னாள் 

"போய் தேத்தண்ணி எடுத்து கொண்டு வா" என்று.அவள் சிறிய சலிப்போடும் பெருமூச்சோடும் அட இதுக்கோ வர சொன்னவர் என்று தனக்குள்ளேயே முனு முனுத்துக் கொண்டு போனாள்.

"சரி என்ன விசயமா வந்தீர்கள் எண்டு சொல்லவே இல்லையே.ஒரு நாளும் வர மாட்டியள்.திடீரென்று வந்திருக்கிறியள்"என்று ஆறுமுகம் கேட்க ரத்தினமும் மாமாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.உள்ளிருந்து அவளும் இவர்களின் கதையை கேட்டுக் கொண்டே அடுப்பில் கேற்றிலை வைத்தாள்.

மெதுவாக விசயத்துக்கு வந்தார் ரத்தினத்தின் மாமா."ரத்தினத்தை உங்களுக்கு தெரியும் தானே.சுத்தி வளைச்சு பாத்தா உங்கட பிள்ளையளுக்கு மச்சான் முறை தான்.அய்யா அம்மாட்ட கூட சொல்லேலை.என்னட்ட தான் சொன்னான்".
இப்படி சாடல் மாடையாக பேசிக் கொண்டிருக்க ஆறுமுகத்துக்கும் ஓரளவு விசயம் விளங்கியது.இடையில்
" இன்னும் தேத்தண்ணி எடுக்கேலையோ" என்றான்.சின்னம்மாள் எழும்பி போய் அவள் தயாரித்து கொண்டிருந்த தேநீரை வாங்கி கொண்டு
" ஒரு வேலையை சுறுதமா செய்ய தெரியா" என்று பேசிக் கொண்டு வந்தாள்.

தேநீர் எடுத்து குடித்து கொண்டே விசயத்தை தொடர்ந்தார் மாமா.
"உங்கட மூத்த பெட்டைக்கும் கலியாணம் வயசு வந்திட்டு தானே.ரத்தினத்துக்கும் அவளை தான் செய்ய விருப்பம்.பழகின பழக்கத்துக்கு துரோகம் செய்ய கூடா எண்டு தான் பிள்ளையோட கதைக்காம உங்களோட கதைக்க சொன்னவன்" என்று தொடர்ந்தார்.சின்னம்மாளின் முகம் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தது. ஆறுமுகம் யோசித்து கொண்டிருந்தான். அவளும் தங்கையும் உள்ளே இருந்து வரிந்த மட்டைகளுக்கூடாக ஆறுமுகத்தின் முகத்தையும் சின்னம்மாளின் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தனர்.ரத்தினம் விறைத்துப் போயிருந்தான்...

அவள் பயணத்தில் - சுஜா தவம்

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.