Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, September 03, 2018

சோமாலியாவில் குண்டுவெடிப்பு ; 6 பேர் பலி!

Currently online
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 6 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

சோமாலியாவின் தலைநகரான மோகதிசுவில் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் அரசு அலுவலகத்தில் வேகமாக நுழைந்த கார் வெடித்தது. இதில் அந்தக் காரை தடுக்கச் சென்ற ராணுவ வீரர் உட்பட 6 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு அல் ஷபாப் இயக்கத்தினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இது தொடர்பான தகவலை அந்த அமைப்பு இயக்கி வரும் அனடாலுஸ் வானொலியில் வெளியிட்டுள்ளனர்.

சோமாலிய அரசுக்கு எதிராக அல் கொய்தாவுடன் இணைக்கப்பட்டுள்ள அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்தினர், பெரும்பாலும் ஹோட்டல்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் என குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.



jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.