Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, September 02, 2018

மன்னித்து விடுங்கள்...!

Currently online
விரட்டி விரட்டி விண்ணப்பித்ததும் நான் தான்

தேடி வந்து காதல் சொன்னதும் நான் தான்
தேவையில்லை என்றவளும் நான் தான்

கவிதை வேண்டாம் உங்கள் 
கண்ஜாடை போதும் என்றவளும் நான் தான்

இத்தக்குற்றத்துக்கு 
இலங்கை சட்டக்கோவையில் 
இடமில்லை என்றாலும்
அத்தனை தவறும் என் மேல் அடுக்கி எனக்கு
ஆயுள் தண்டனை வழங்குங்கள்

ஆனாலும் நான்

படுத்த படுக்கையாய் பாரிச வாதபிடியில்
பத்து வருடமாய் வாடும் என் தந்தை

அரிசியில் இருந்து ஆடை வரை என்னையே நம்பி சிக்கனத்தை மட்டும் சீர்வரிசையாய் கொண்டு வந்த என்தாய்

பல்கலை சென்று 
பட்டம் முடிக்கும் கனவுடன் படித்து 
ஆறாயிரம் ரூபாயில் அத்தனை செலவையும் அடக்கி வாழும் தங்கை

உலகம் உறங்கி போகையிலும் 
ஒன்லைன் விட்டு நகரா தம்பி

சக்கரை வியாதிக்காரகட்கு 
இன்சுலின் போல இத்தனை பேருக்கும் நான்

இத்தனையையும் விடுத்து 
எப்படி வரமுடியும் உங்களுடன்

மன்னித்து விடுங்கள் மறு ஜென்மத்தில் வசதியாய் பிறந்து வருவேன்

     நன்றி 
SP Theepakan
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.