Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, September 02, 2018

முகநூல்_யுத்தம்.....!

Currently online
சாப்பாட்டையும் இடுகையையும்
சம அளவில் ஏற்றி ஏற்றி வாழ்பவன்
அவன்.
விருப்பங்களின்(likes) எண்ணிக்கையே அவனது ஆயுட்காலம்..

நீண்ட நாட்கள் கழிந்த பின்பு
மீண்டும் தனது முகநூலை 
திறந்துகொள்கிறான்.

எப்போதெனில் பாடசாலை தந்த அந்த இடைவேளைப் பொழுதொன்றில்..

அப்போது அவன் சட்டைப்பைக்குள் எத்தனை data காட்கள்..
குறுஞ்செய்திகளைக் கண்டவுடன்
கண்களை விழுங்கி விட்டது
massanger..

இது எனது முகநூல்தானா
இல்லை எனது பெயரை உடைய வேறொருவர் முகநூலா..

நகரத்துக் குப்பைத்தொட்டியாய்
உள்பெட்டி நிறைந்து கிடக்கிறதே...

ஓ... இவையெல்லாம் இந்த இடைவேளையில் அனுப்பப்பட்டவையோ..

வாரங்கள் பல மறைந்த பிறகும்
மாறமலே இருக்கிறது சில பதிவுகள்..

ஏய் முகநூலே..
உலக வேலையில்லாதோர் வரிசையில் நான் எத்தனையாவது இடம் அறிவாயா?

எனக்குத்தெரிந்த ஒரே ஒரு ஆங்கில எழுத்து F என்பதை அறிவாயா..

உன்னைத்திறந்த பின்புதான் பைத்தியங்களோடு கூட பேசப்பழகினேன்..

கண்ணாடி கூட காட்ட மறுக்கும் சில முகங்களை எப்படிதான் ஏற்றுக்கொள்கிறாயோ...

வழமையாக காதல் கவிதை போடும் அந்த இளைஞன் எங்கே ஒருவேளை ஒருவேளை கல்யாணம் கட்டியிருப்பானோ..

அதோ எனது காலக்கோட்டில் என்றுமில்லாதவாறு பெண்ணின் இடுகையிருக்கிறதே 
அவள் என்னைத்தேடியிருப்பாளோ
என்னைக்காணாது வாடியிருப்பாளோ..
இல்லை காலை வணக்கம் சொல்லியிருக்கிறாள்..

பெறப்பட்ட செய்திகளில் ஒன்று கூட
பாசத்திற்கு வந்தவையில்லை பகிர்தலுக்கு வந்தவை..

பரவாயில்லை முகநூலே!
இறுதியாய் ஒரு இடுகை இடுகிறேன்!

#முகநூலை_விட்டுப்போகிறேன் என்று அப்போது கூட அதன் விருப்ப எண்ணிக்கையை பார்த்துவிட்டுதான் உன்னை நீக்குவேன்..

       
      நன்றி 
 த. யசுதன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.