Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, September 05, 2018

எனது_ஆறாவது_அறிவு_என் அக்கா..!

Currently online
பகுத்தறிவு கிடையாத பைத்தியம் நான்..
பக்கத்து வீட்டாரின் நாய்க்குட்டி நான்..
நானறிந்த அறிவெல்லாம் அஃறிணையும் அறியும்..
அக்காவின் அன்பை யாருக்கிங்கு புரியும்..

உலகத்தை உணர்வதற்கு
ஊடகமாய் இருந்தவள் நீ!
உளறுகின்ற வார்த்தையெல்லாம்
கவிதையென்று புகழ்ந்தவள் நீ!

போலிகள் எனைச்சூழ
வேலியாய் ஆனவள் நீ!
குறும்புகள் செய்தால் கூட
விரும்பி அதை இரசித்தவள் நீ!

நீ சொன்ன அறிவெல்லாம்
நாசாவும் பேசாது...
நீ தந்த அன்புக்கு அம்மாவும்
ஈடாகாது...

நீசொல்லும் தலைப்பே என் கவிதைக்கு கருப்பொருள்..
நீ இல்லை என்றால் நானோ
வெறும் சடப்பொருள்..

     நன்றி 
த. யசுதன் 

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.