Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, September 06, 2018

முல்லைத்தீவில் மிதிவெடி வெடித்து உயிரிழந்த இளைஞன் ; கர்ப்பிணி மனைவி எடுத்த விபரீத முடிவு!

Currently online
முல்லைத்தீவு, மாங்குளம், மல்லாவி வீதியில் மிதிவெடி அகற்றும் போது, மிதிவெடி வெடித்து காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

வவுனியா ஓமந்தை பிரதேசத்தை சேர்ந்த ஆர்.நிதர்ஷன் என்ற 25 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் மனைவி சாரதா என்ற 22 வயதான இளம் பெண், கணவனின் இழப்பு தாங்க முடியாமல் மனவிரக்தியடைந்து விஷம் அருந்தியுள்ளார். அவ்வாறு விஷமருந்தியவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர் கர்ப்பிணி என தெரியவந்துள்ளது.

அவரது நிலைமை ஆபத்தாக உள்ளதென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் குறித்த இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.