Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, September 09, 2018

நீ வேண்டும் !

Currently online
சோர்ந்து போகும் வேளையில் 
தோள் சாய நீ வேண்டும்
மகிழ்ந்து நிறையும் வாழ்வினில்
உச்சி முகர நீ வேண்டும் .....

தவறி விழும் நேரத்தில்
தாங்கிப் பிடிக்க நீ வேண்டும்
உயர்ந்து செல்லும் பாதையில்
ஏணியாக நீ வேண்டும் .....

கலைந்து செல்லும் கனவுகளை
நிஜமாக்க நீ வேண்டும்
கலங்கி நிற்கும் விழிகளை
துடைக்கின்ற கரமாக நீ வேண்டும் .....

கொஞ்சி விளையாடும்
மழலையாக நான் வாழ
நித்தமும் நீ வேண்டும்
அத்தனும் நீயாக வேண்டும் .....

ஊடல் கொள்ளும் வேளையில்
தேடலாக நீ வேண்டும்
பாடல் இல்லாத சாலையில் 
நாதமாக நீ வேண்டும் .....

சோலைவனக் கிளிபோல
சொந்தம் கொள்ள நீ வேண்டும்
ஓராயிரம் நினைவுகளோடு
கண்மூடி நான் போக வேண்டும் !

             நன்றி 
நிவேதா நிவேதிகா.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.