Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, September 05, 2018

கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமியின் கணவருக்கு ஆறுதல் கூறிய ரஜினி!

Currently online
குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமியின் கணவர் தீவிர ரஜினி ரசிகர். அவரது நிலையை கண்ட ரஜினி அவரை அழைத்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தையே உலுக்கிய அபிராமியின் வழக்கில் அவரது செயலை வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எந்த தாயும் செய்யத்துணியாத செயலை செய்த அபிராமியின் செயலால் அவரது கணவர் விஜய் தனது இரண்டு குழந்தைகளையும் இழந்து நிற்கிறார்.

விஜய் தீவிர ரஜினி ரசிகர். அவரது குழந்தைகளும் ரஜினி ரசிகர்கள். இந்நிலையில் தனது ரசிகரின் குழந்தைகள்தான் கொல்லப்பட்டது என்பது குறித்து அறிந்த ரஜினி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக விஜயை தனது வீட்டுக்கு அழைத்து வரச்சொன்னார்.

வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட ரசிகர் விஜயை கட்டியணைத்து ரஜினி ஆறுதல் கூறினார். ரஜினியை பார்த்ததும் விஜய் கதறி அழுதார். அதைப்பார்த்த ரஜினி வருத்தத்துடன் அவரைத்தேற்றினார். அவரது குடும்ப விபரங்களை கேட்டார். பின்னர் என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள் என்று கூறி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.