Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, September 03, 2018

யார் வருவார் இனி சேர்க்க.....!

Currently online
பாலூட்டி வளர்த்தவளே 
பகலிரவாய் காத்தவளே
பலதுன்பம் வந்தும் எமை 
பத்திரமாய் மீட்டவளே
பாலகரை பறிக்குமளவு 
பாசம் யாரில் வைத்திருந்தாய்
பாடையிலே எம்மை ஏற்ற
பாதகியேன் நினைத்திருந்தாய்...

தாயென்று உன்னை நாங்கள் 
தரமுயர்த்தி வைத்திருந்தோம்
இறை போன்று உனை எங்கள்
இதயத்தில் வைத்திருந்தோம்
இரங்காது இருவரையும் 
இறந்து போக வைத்தவளே
எமதாசை தந்தையையும்
இழந்து போக செய்தவளே...

அப்பாவின் வரவுக்காய் 
அந்தி மாலை காத்திருந்தும்
அன்னையான உன் முகத்தை
அன்று மட்டும் பார்த்திருந்தும்
பலனேதும் இல்லையம்மா
படுத்துறங்க வைத்து விட்டாய்
பாசமென்று வேஷம் காட்டி 
பரணி விட்டே அனுப்பி விட்டாய்...

உண்ணாது நீ இருக்க அம்மா
உடனிருந்து நாம் அழுதோம்
உன்னோடு சேர்ந்து தானே
உறக்கம் விட்டு நாம் எழுந்தோம்
பொல்லாத பிள்ளையென்று
ஒரு நாளும் சொன்னதில்லை
பொறம்போக்கு என்று பலர்
புறம் பேசிச் சென்றதில்லை...

கால் கையும் ஊனமென்று 
உன் கருவில் பிறக்கவில்லை
கல்வி கற்று செல்வம் பெற
நாங்களுமோ மறுக்கவில்லை
இருந்தாலும் இருவரையும்
ஏனம்மா பிடிக்கவில்லை
சரிந்து விட்டோம் சத்தியா
இதயமின்று துடிக்கவில்லை...

வருந்தி நாங்கள் வானில் நின்று
உன்னையும் தான் தேடுகிறோம்
திரும்பி எங்கள் வீடு வர 
அங்க இங்க ஓடுகிறோம்
பாதை ஏதும் இல்லையம்மா 
தேவதையுன் முகம் பார்க்க - நீ
தேவை என்று கதறினாலும்
யார் வருவார் இனி சேர்க்க.....????

         நன்றி 
   காரை சசி...

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.